எஸ்.ஆர்.எம் நிறுவனத்தின் மீது 06.03.2015 தேதியில் பல்வேறு விதிமீறல்கள் பற்றி ஒரு புகார் அனுப்பப் பட்டு இருந்தது. அந்த புகார் http://pmaed.org/uncategorized/appeal-to-government-for-take-over-srm-university-to-protect-the-life-and-future-of-the-students/ இணைப்பில் உள்ளது.
இந்திய அரசு நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய நிலத்தடி நீர் வாரியத்திடம் இருந்து தடையில்லா சான்று பெற வேண்டும் என நிபந்தனை விதித்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயக்குனர் எஸ்.ஆர்.எம். நிறுவனத்திற்கு சம்மதம் தெரிவித்து இருந்தார். ஆனால் மத்திய நிலத்தடி நீர் வாரியம் தங்களிடம் தடையில்லா சான்று கேட்டு விண்ணப்பமே சமர்பிக்கவில்லை என்றும் எனவே புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாநில நிலத்தடி நீர் வாரிய தலைமை பொறியாளருக்கு கடிதம் எழுதி உள்ளது. நிபந்தனையை மீறியதற்கு நடவடிக்கை எடுக்க இன்னும் எவ்வளவு நாள் ஆகுமோ தெரியவில்லை.