பொய் ஆவணம் தயாரித்து சமர்பித்த எஸ்.ஆர்.எம். பச்சமுத்து மீது குற்ற நடவடிக்க எடுக்க கோரிக்கை

நாள் : 29.05.2015
பெறுநர்

உயர்திரு. மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,
எஸ்.பி ஆபிஸ்,
திருச்சிராப்பள்ளி
திருச்சி மாவட்டம்.

ஐயா,

பொருள் : பல மாடி கட்டிட மருத்துவ கல்லூரி பகுதியாக அறிவிப்பு செய்ய திருவாளர்கள் எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி நிறுவனத்தினர் பொய் ஆவணம் தயாரித்து உதவி இயக்குனர், நகர் ஊரமைப்பு துறை அலுவலர் மூலம் நகர் ஊரமைப்;பு துறை ஆணையாளர் அலுவலகத்திற்கு அனுப்பியது – சம்பந்தப்பட்ட நிறுவனம் மற்றும் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக அலுவலர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க பணிவான விண்ணப்பம்.

பார்வை : 1. நகர் ஊரமைப்பு துறை உதவி இயக்குனர், திருச்சி கடிதம் ந.க.எண் 1893/10-திம.2 நாள் 21.05.2012
2. மணச்சநல்லூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கடிதம் ந.க.தி2-1617/2015 நாள் 19.5.15
3. இருங்களுர் மற்றும் ஆய்குடி ஊராட்சி செயலர் மற்றும் பொது தகவல் அலுவலர் கடிதம் நாள்
இல்லை

திருவாளர்கள் எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி நிறுவனத்தினர் திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் வட்டம் இருங்களுர் மற்றும் ஆய்குடி கிராமத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க பலமாடி கட்டிட பகுதியாக அறிவிக்கை செய்ய சில பொய்யான ஆவணங்களுடன் நகர் ஊரமைப்பு துறை, உதவி இயக்குனர், திருச்சிக்கு கடிதம் எழுதி அதன் அடிப்படையில் அவர்கள் கொடுத்த பொய்யான ஆவணங்களை நம்பி பார்வை 1-ல் கண்டபடி திருச்சி உதவி இயக்குனர் அவர்கள் பரிந்துரை செய்து இருந்தார்கள். மேற்கண்ட பார்வை 1-ல் கண்ட கடிதத்தில் இனம் 1-ஆக நகர் ஊரமைப்பு துறை இயக்குனர் கூறிய படி ஆய்குடி ஊராட்சி மன்ற தீர்மானம் எண் 84 நகல் பெறப்பட வேண்டும் என்பதற்கு பெறப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்கள். மேற்கண்ட தீர்மானம் மனுதாரரான எஸ்.ஆர்.எம்.இன்ஸ்ட்டியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி நிறுவனத்தினரின் 7.7.2011 தேதிய கடிதப்படி பெறப்பட்டதாக குறிப்பிட்டு இருந்தார்கள்.

அதேபோல் அவர்களது கடிதத்தில் ஆய்குடி மற்றும் இருங்களுர் ஆகிய இரண்டு ஊராட்சிமன்றமும் இதற்கு அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாகவும், ஊராட்சி மன்ற தலைவர்கள் அதற்கு கடிதம் கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளார்கள். மேற்கண்ட உதவி இயக்குனர், நகர்ஊரமைப்பு துறை , திருச்சி அவர்களின் அறிக்கை நகல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஆனால் உண்மையில் இருங்களுர் மற்றும் ஆய்குடி ஊராட்சி மன்றத்தில் அவ்வாறு எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. இந்த விபரத்தை பார்வை 2 மற்றும் 3-ல் கண்ட தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மேற்கண்ட அலுவலர்கள் தெரியப்படுத்தி உள்ளார்கள்.

எனவே உரிய அனுமதி எதுவும் இல்லாமல் தீர்மானமும் இல்லாமல் ஊராட்சிமன்றத்தின் பெயரில் ஒரு பொய் ஆவணத்தை எஸ்.ஆர்.எம். நிறுவனத்தினர் தயாரித்து அவர்களது 7.7.2011 தேதிய கடிதத்தோடு இணைத்து உதவி இயக்குனர் அலுவலகத்தில் கொடுத்து அதை உண்மை என நம்ப வைத்து உதவி இயக்குனர் மூலம் சென்னைக்கு பரிந்துரை கடிதம் பெற்றுள்ளார்கள். எனவே இது இந்திய தண்டனை சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் ஆகும். இது சம்பந்தமாக குற்ற வழக்கு பதிவு செய்து எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக அலுவலர் மீது உரிய குற்ற நடவடிக்கை எடுக்க பணிவாய் கேட்டுக் கொள்கிறேன்.

பார்வையில் கண்ட நகர் ஊரமைப்பு துறை உதவி இயக்குனரின் கடிதம் மற்றும் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. ஊராட்சி மன்ற தலைவர் கடிதம் எழுதப்படவில்லை என தெரியப்படுத்திய கடித நகலும் இத்துடன் இணைத்துள்ளேன்.

நன்றி

தங்கள் உண்மையுள்ள

எஸ்.கிருஷ்ணமூர்த்தி

Town and country planning lr reg SRM Trichy 21.5.12 Aaikudy and Irunkalur Panchyat president lr

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *