பா.ம.க நிறுவனர் ராமதாஸ் குறித்து தவறான தகவல் வெளியிட்டதாக எஸ்ஆர்எம் குழுமத் தலைவர் பச்சமுத்து மீது தொடரப்பட்ட வழக்கை ஜுலை 15ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை ஜார்ஜ் டவுன் பெருநகர குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து நாராயணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த 11ம் தேதி பச்சமுத்து வெளியிட்ட அறிக்கையில், திமுக, அதிமுகவிற்கு இணையாக தேர்தலில் பல கோடிகளை செலவு செய்து பாட்டாளி மக்கள் கட்சி செய்தி தாள்களில் விளம்பரம் வெளியிட்டது எப்படி? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் கட்சி மாநாட்டிற்கும், இல்ல சுப நிகழ்ச்சிக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ் தம்மிடம் கையேந்தவில்லையா? என்றும் உண்மைக்கு புறம்பான கேள்வி எழுப்பியிருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த அறிக்கையை வெளியிட்ட பாரிவேந்தர் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் நாராயணன் கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை ஜார்ஜ் டவுன் பெருநகர குற்றவியல் நீதிதுறை நடுவர் ஈஸ்வர மூர்த்தி முன் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கை ஜுலை 15ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
Link : http://ns7.tv/ta/case-pacha-muthu-adjourned.html