பச்சமுத்து பாரிவேந்தர் ஆனது எப்படி??

img

“எஸ்.ஆர்.எம். குழுமத்தின் வளர்ச்சி எப்படி?”

*எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் வேந்தரான பச்சமுத்து தொடக்கத்தில் சென்னையில் பி.டி. லீ. செங்கல்வராய நாயகர் அறக்கட்டளைக்கு சொந்தமான பாலிடெக்னிக்கில் கணித ஆசிரியராக பணியாற்றினார். அங்கு பணியாற்றும் போதே 1969 ஆம் ஆண்டில் சென்னையில் பிளாரண்ஸ் நைட்டிங்கேல் என்ற பெயரில் தொடக்கப்பள்ளியை தொடங்கினார். ஐந்தாம் வகுப்பு வரை இருந்த அந்த பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக மாற்ற 12 ஆண்டுகள் ஆகின. 1981 ஆம் ஆண்டில் தான் அது மேல்நிலைப் பள்ளியாக மாறியது. அதன்பின் 1984 ஆம் ஆண்டில் வள்ளியம்மை பாலிடெக்னிக் நிறுவனத்தையும், 1985 ஆம் ஆண்டில் காட்டாங்கொளத்தூரில் எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரியையும் பச்சமுத்து தொடங்கினார். இதற்கான முதலீடு எங்கிருந்து வந்தது எனத் தெரியவில்லை.

*1990களின் தொடக்கம் முதல் எஸ்.ஆர்.எம். குழுமம் நம்பமுடியாத அளவுக்கு வளர்ச்சியடைந்தது. 1992 ஆம் ஆண்டில் எஸ்.ஆர்.எம் நர்சிங் மற்றும் பார்மசி கல்லூரி
1993ஆம் ஆண்டில் எஸ்.ஆர்.எம் நர்சிங் மற்றும் பிசியோதெரபி கல்லூரி,
1993ஆம் ஆண்டில் சென்னை மற்றும் திருச்சியில் எஸ்.ஆர்.எம் ஹோட்டல் மேனேஜ்மென்ட் நிறுவனம்
1993ஆம் ஆண்டில் சென்னையில் எஸ்.ஆர்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
1995ஆம் ஆண்டில் எஸ்.ஆர்.எம் பல் மருத்துவக் கல்லூரி
1996ஆம் ஆண்டில் எஸ்.ஆர்.எம் பாலிடெக்னிக் நிறுவனம்,
1996ஆம் ஆண்டில் ஈஸ்வரி பொறியியல் கல்லூரி
1996ஆம் ஆண்டில் எஸ்.ஆர்.எம் ஆக்குபேஷனல் தெரபி கல்லூரி
1997ஆம் ஆண்டில் தில்லியில் எஸ்.ஆர்.எம் மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்
1999ஆம் ஆண்டில் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி சென்னை
2002 ஆம் சென்னை இராமாபுரத்திலுள்ள எஸ்.ஆர்.எம் நிறுவனங்கள் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்டது.
2003 ஆம் ஆண்டில் காட்டாங்கொளத்தூரில் உள்ள நிறுவனங்களும் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தின் வரம்புக்குள் கொண்டு வரப்பட்டன.
2005 ஆம் ஆண்டில் எஸ்.ஆர்.எம். நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. கல்வியியல் பள்ளியும் ஆரம்பிக்கப்பட்டது.
2005 ஆம் ஆண்டில் தில்லியில் உள்ள எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனங்களும், சென்னையிலுள்ள நர்சிங், பார்மசி, பிசியோதெரபி கல்வி நிறுவனங்களும் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.
2006ஆம் ஆண்டில் எஸ்.ஆர்.எம். நிகர்நிலைப் பல்கலைக்கழகம் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது.
2007 ஆம் ஆண்டில் எஸ்.ஆர்.எம். பல் மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது.
2007 ஆம் ஆண்டில் எஸ்.ஆர்.எம். சமுதாய வானொலி தொடங்கப்பட்டது.
2009 ஆம் ஆண்டில் திருச்சியில் எஸ்.ஆர்.எம். சென்னை மருத்துவக் கல்லூரி தொடக்கம்
2010 ஆம் ஆண்டில் இந்திய மருத்துவப் பள்ளி தொடங்கப்பட்டது.
2010 ஆம் ஆண்டில் திருச்சியில் டி.ஆர்.பி. பொறியியல் கல்லூரி தொடங்கப்பட்டது.
2011 ஆம் ஆண்டில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் வடபழனி வளாகம் தொடங்கப்பட்டது.
2012 ஆம் ஆண்டில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் ஹரியானா வளாகம் தொடக்கம்.
2013 ஆம் ஆண்டில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் சிக்கிம் வளாகம் தொடக்கம்

-என மிகக்குறுகிய காலத்தில் 30-க்கும் அதிகமான கல்வி நிறுவனங்களை எஸ்.ஆர். எம். குழுமம் தொடங்கியது. தொடக்கப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக்க 12 ஆண்டுகள் ஆன நிலையில் , அடுத்த 20 ஆண்டுகளில் 30க்கும் அதிகமான கல்வி நிறுவனங்களைத் தொடங்க எஸ்.ஆர். எம். குழுமத்திற்கு எங்கிருந்து பணம் வந்தது? எஸ்.ஆர். எம். பல்கலைக்கழகத்தின் தற்போதைய மதிப்பு ரூ.10,000 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

————————————–
“பிற நிறுவனங்கள்”

*கல்வி நிறுவனங்கள் மட்டுமின்றி பிற நிறுவனங்களையும் எஸ்.ஆர். எம். குழுமம் நடத்தி வருகிறது. எஸ்.ஆர். எம். டிராண்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் 500க்கும் அதிகமான பேரூந்துகள் இயக்கப்படுகின்றன.

* எஸ்.ஆர்.எம். குழுமத்தில் மருத்துவமனைகள் நடத்தப்படுகின்றன.
* எஸ்.ஆர்.எம். குழுமத்தில் ஓட்டல்கள் நடத்தப்படுகின்றன.
* எஸ்.ஆர்.எம். குழுமத்தின் சார்பில் வேந்தர் தொலைக்காட்சி, புதிய தலைமுறைத் தொலைக்காட்சி, புதுயுகம் தொலைக்காட்சி, புதிய தலைமுறை வார்ட இதழ், புதிய தலைமுறை கல்வி வார இதழ் ஆகிய ஊடகங்களும் நடத்தப்படுகின்றன.

* மின்னணு பொருட்கள், தொழில்துறை கருவிகள் தயாரிப்பு நிறுவனங்களை நடத்துகிறது.
* Green Pearl Electronics Pvt. Ltd (பச்சமுத்து மின்னணு நிறுவனம்) என்ற பெயரில் சூரிய ஒளி உள்ளிட்ட பசுமை வழி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நிறுவனத்தையும் எஸ்.ஆர்.எம். குழுமம் நடத்தி வருகிறது.
* எஸ்.ஆர்.எம். குழுமத்தில் இப்போது உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
* எஸ்.ஆர். எம். குழுமத்தின் தற்போதைய மதிப்பு ரூ.15,000 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சாதாரண ஆசிரியராக பணியாற்றிய ஒருவருக்கு இவ்வளவு சொத்துக்கள் எப்படி வந்தது..!-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *