வேந்தர் மூவிஸ் மதன் மாயமானாரா ? அல்லது மாயமாக்கப்பட்டாரா ? என மதன் வழக்கில் முக்கிய சாட்சியாக இருக்கும் சினிமா பைனான்சியர் போத்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.
எஸ்ஆர்எம் பல்கலை கழகத்தில் மருத்துவ படிப்பில் சேர்ப்பதாகக் கூறி மாணவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கிய வேந்தர் மூவிஸ் மதன் மாயமாகி உள்ளார். இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருக்கக்கூடிய சினிமா பைனான்சியர் போத்ரா, தமது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மாயமான மதனைத் தேடுவதில் எந்த பயனும் இல்லை என ஆதங்கம் தெரிவித்தார். மேலும் வேந்தர் மூவிஸ் மதன் மாயமானாரா? அல்லது திட்டமிட்டு மாயமாக்கப்பட்டாரா? எனவும் போத்ரா கேள்வி எழுப்பினார்
தொடர்ந்து பேசிய போத்ரா, வழக்கை வாபஸ் பெறுமாறு பச்சமுத்து ஆதரவாளர்கள் மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டினார். இந்த விவகாரம் தொடர்பாக SRM பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்துவைக் கைது செய்ய வேண்டும் எனவும் சினிமா பைனான்சியர் போத்ரா வலியுறுத்தினார்.
மேலும் பச்சமுத்து முன்னிலையில் தான், ஏழறை கோடி ரூபாய் பணத்தை மதனிடம் கொடுத்ததாகவும், மதன் வெறும் கருவியாக மட்டுமே செயல்பட்டதாகவும், இதன் பின்னணியில் பச்சமுத்து இருப்பதாகவும் பைனான்சியர் போத்ரா குற்றம்சாட்டினார்.
Link : http://ns7.tv/ta/paccamuttuvaik-be-arrested-bothra-assertion-film-financier.html