சென்னை: பிரபல சினிமா நிறுவனமான வேந்தர் மூவிஸின் எஸ்.மதன், ஐ.ஜே.கே. கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தருக்கு எழுதியுள்ளதாகக் கூறப்படும் கடிதம் தமிழ் சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில வருடங்களாகத் தமிழ் திரைப்பட உலகில் சினிமா தயாரிப்பு மற்றும் வெளியீடுகளை செய்து வருகிறது வேந்தர் மூவிஸ் நிறுவனம். இந் நிறுவனம் இதுவரை 15 திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அண்மையில்,சில படங்களில் நஷ்டம் ஏற்பட்டதையடுத்து வேந்தர் மூவிசின் அதிபர் எஸ்.மதன் மற்றும் ஐ.ஜே.கே. கட்சியின் நிறுவனர் பாரிவேந்தருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், எஸ்.மதன் தனது நிறுவன லட்டர்பேடில் 4 பக்க அளவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் என்றும் அந்தக் கடிதத்தில் தனக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை பாரிவேந்தர்தான் தீர்க்கவேண்டும் என்றும் இல்லை என்றால் காசியில் கங்கையில் சமாதி அடைகிறேன் என்றும் மதன் குறிப்பிட்டுள்ளார் என செய்திகள் வெளிவந்துள்ளன. இது தொடர்பாக,மதனின் கடிதங்கள் என்று கூறப்படும் ‘லட்டர்பேடு’ பக்கங்கள் வாட்ஸ் அப்பில் பரவிவருகின்றன. இதனால் தமிழ் சினிமா உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Link: