கல்வி கொள்ளைக்கு மருத்துவர் ராமதாசும், அன்புமணி ராமதாசும் மட்டும் அல்ல, பிற எதிர் கட்சிகளும் உடந்தையாகவே உள்ளார்கள்.

கல்வி கொள்ளைக்கு மருத்துவர் ராமதாசும், அன்புமணி ராமதாசும் மட்டும் அல்ல, பிற எதிர் கட்சிகளும் உடந்தையாகவே உள்ளார்கள். கடந்த 9.3.15 அன்று பதிவு அஞ்சலில் மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி உட்பட ஏராளமான அரசியல் கட்சி தலைவர்களுக்கு எஸ்.ஆர்.எம்.பச்சமுத்து நடத்தும் கல்வி நிறுவனங்களின் கல்வி கொள்ளைக்கு ஆதாரமாக அரசு அலுவலகங்களில் இருந்து பெறப்பட்ட இந்த இணைய தளத்தில் நகல் இணைக்கப்பட்டுள்ள அனைத்து ஆவண நகல்களையும் இணைத்து பதிவு அஞ்சலில் கடிதமாக எழுதப்பட்டது. அனைத்து கடிதங்களும் திசையன்விளை அஞ்சல் அலுவலகத்தில் இருந்து பதிவு அஞ்சல் மூலம் 10.3.15 அன்று அனுப்பப் பட்டது. மருத்துவர் அன்புமணிக்கு அனுப்பப்பட்ட பதிவு அஞ்சல் எண் ART603438185 IN, திரு.ஜி.கே.மணி அவர்களுக்கு அனுப்பப் பட்ட பதிவு அஞ்சல் எண் ART603438300 IN, மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு அனுப்பப் பட்ட பதிவு அஞ்சல் எண் ART603438415 IN. ஆனால் கடந்த ஆறு மாத காலம் ஆகியும் இது வரை மேற்கண்ட கல்வி கொள்ளை பற்றி எந்த அரசியல் கட்சியும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக இந்த புகாரை காட்டி மிரட்டி கூடுதல் தொகையை பெற்றதாகத் தான் பேசப்படுகிறது. தற்போது முகநூலில் கடிதம் எழுதி இருந்தால் அதை தெரியப்படுத்த வேண்டும் என சிலர் கேட்டு கொண்டதால் இந்த விபரம் தெரிவிக்கப்படுகிறது.

இது போக திரு.நியாஸ் அகமது என்பவர் கடந்த 5.3.15 அன்று அனைத்து ஆவணங்களையும், புகாரையும் மின் அஞ்சலில் மக்கள் தொலைகாட்சி, புதிய தலைமுறை தொலைகாட்சி உட்பட அனைத்து தொலைகாட்சிகளுக்கும் அனுப்பி உள்ளார். இதற்கும் மக்கள் பிரச்சனையை பேசுவதாக மார்தட்டி கொள்ளும் மேற்கண்ட இரண்டு தொலைகாட்சிகளும் நாளது தேதி வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேல் அதிக விபரம் வேண்டும் எனில் அதனை வழங்க தயாராக உள்ளோம்.

Anbumani Ramadas

Ramdas

GK Mani

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *