அரசு பணம் பல ஆயிரம் கோடி மோசடி. இந்திய அரசு கல்வியையும் ஆராய்ச்சியையும் ஊக்குவிக்க பல்வேறு புராஜக்ட்களுக்கு ஆண்டு தோறும் ஏராளமான பணத்தை ஒதுக்கீடு செய்து வருகிறது. இந்திய அரசு சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி துறையில் இருந்து இந்த பணம் பொதுவாக ஒதுக்கீடு செய்யப்படும். இதில் நியாயமான ஆராய்ச்சிக்கு செலவிடப்படும் தொகை மிகக் குறைவு. மாறாக ஆராய்ச்சி என்ற பெயரிலும் புராஜக்ட் என்ற பெயரிலும் ஏப்பம் இடப்படும் தொகை ஏராளம். டாக்டர் சமாதானம் என்று ஒருவர் இந்திய அரசு சயின்ஸ் டெக்னாலஜியில் பணியாற்றி வருகிறார். இவரது சகோதரர் டாக்டர் விக்டர் ராஜமாணிக்கம் என்பவர் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்தார். அப்போது அவரது சகோதரர் சமாதானத்தின் செல்வாக்கை பயன்படுத்தி ஏராளமான பணம் புராஜக்ட் என்ற பெயரில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்திற்கு விக்டர் ராஜமாணிக்கத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மேற்கண்ட தொகைகள் இவரால் பொய்யான வவுச்சர் வைத்து கையாடல் செய்யப்பட்டன. எந்த புராஜக்ட் ரிப்போர்ட்டும் தயாரிக்கப்படவும் இல்லை. சமர்பிக்கப் படவும் இல்லை. எந்த ரிப்போர்ட்டும் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்திலேயோ அல்லது கன்னிமாரா நூலகத்திலோ அல்லது இதர நூலகத்திலோ குறிப்பாக இந்த புராஜக்ட்டுக்கு பகுதி பணத்தை கொடுத்த இந்திய அரசு விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்ப துறையிலேயோ கிடையாது.
தன் சகோதரரை காப்பாற்றுவதற்காக டாக்டர் சமாதானம் விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகத்தில் பணம் ஒதுக்கீடு செய்து பணம் பட்டுவாடா கொடுத்த உடன் தொடர்புடைய கோப்புகளை எடுத்து அழித்து விட்டார். தற்போது அமைச்சகத்தில் கோப்புகளே இல்லை. ஆனால் அமைச்சகத்தில் இருந்து பணம் வந்த விபரம் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் உள்ளது.
இவ்வாறு அமைச்சகத்தில் இருந்து 35 முறை விக்டர் ராஜமாணிக்கத்திற்கு மட்டும் தஞ்சை பல்கலைக்கழகத்திற்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. ஆனால் இவரது தம்பி இவருக்கு கொடுக்கும் பதில் ஒரே ஒரு முறை பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது என்பது தான். அப்படியானால் இதர அனைத்தையும் இவர்கள் கணக்கிலேயே வராமல் மறைப்பதற்காக இவரது சகோதரர் டாக்டர் சமாதானம் கோப்பையே மறைத்து விட்டார்.
இது போக விக்டர் ராஜமாணிக்கம் எங்கெங்கு பணியாற்றினாலும் அங்கங்கு பணம் பட்டுவாடா செய்யப்படும். தஞ்சை பல்கலைக்கழகத்தில் பணி ஓய்வு பெற்ற பிறகு சாஸ்திரா பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். உடனடியாக அங்கு பணம் ஒதுக்கீடு செய்யப் பட்டது. அதே போல் இவர் படித்தது புவியியல். ஆனால் எந்தெந்த முறையில் பணம் கையாடல் பணம் செய்ய முடியுமோ அந்தந்த முறையில் எல்லாம் பணம் கையாடல் செய்வது இவரது பழக்கம்.
உதாரணமாக இதய நோய்களை தடுப்பதில் சித்த மருத்துவத்தின் பங்கு என்ற பெயரிலும் கோடி கணக்கான ரூபாய் இவர் பதவி ஓய்வு பெற்ற பிறகு சாஸ்திரா பல்கலைக்கழகம் மூலம் சுருட்டப் பட்டது.
இதற்கு எதற்கும் ஆவணங்களோ அறிக்கைகளோ இல்லை. கல்வியையும் அறிவையும் உபயோகித்து எப்படி கொள்ளை அடிப்பது என்பதற்கு இவரை பயிற்சி எடுக்க செய்யலாம்.
இவ்வளவு பெரிய கொள்ளையை செய்து எவ்வாறு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என கேட்கலாம். அதற்கு தான் அவர் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் மற்றும் மெகா கனிம கொள்ளையில் ஈடுபட்ட திரு.தயாதேவதாஸ் ஆகியோரை தஞ்சம் அடைந்துள்ளது. இவர்கள் இருவரும் அப்போதைய பிரதமரோடு உள்ள ஒரு புகைப்படத்தை வைத்து அனைத்து அரசு அலுவலகங்களையும் மிரட்டி வந்தார்கள். இவர்கள் இவ்வளவு பெரிய மெகா கனிம கொள்ளை செய்வதற்கு திட்டமிட்டு கொடுத்து பொய் ஆவணங்கள் தயாரித்து கொடுத்ததால் அரசு நடவடிக்கையில் இருந்து இவரை மேற்கண்ட இருவரும் பாதுகாத்தார்கள்.
டாக்டர் சமாதனம் பணியாற்றும் டிபார்ட்மெண்ட் ஆப் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி (DST) துறையில் இருந்து 1994-95-ல் இருந்து ஒரு முறை மட்டுமே பணம் கொடுக்கப் பட்டுள்ளது என எழுதிய கடிதமும் மாறாக தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் 1994-95-ல் இருந்து 35 முறை பணம் பெறப்பட்டுள்ளது என எழுதிய கடிதமும் இத்துடன் இணைக்கப் பட்டுள்ளது.
இந்த கல்வி கொள்ளையர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியது நமது கடமை அல்லவா!!!
மேலும் விபரங்கள் தொடரும்….
அரசு பணம் பல ஆயிரம் கோடி மோசடி. உலகமகா யோக்கியன் என சில முறை தொலைகாட்சிகளில் பேட்டி அளித்து சந்தியா ரவிச்சந்திரனுக்கு பேட்டி கொடுத்து பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளேன் என மார்தட்டும் விக்டர் ராஜமாணிக்கம் அவரது கல்வி அறிவை பயன்படுத்தி அவர் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் போது அவரது சகோதரர் சமாதானம் பணியாற்றும் இந்திய அரசின் சயின்ஸ் டெக்னாலஜி துறையில் பல்வேறு புராஜக்ட்களின் பெயரில் 35 முறை பணம் பெற்றுள்ளார். இதனை தமிழ் பல்கலைக்கழக நிதி அலுவலர் விமலா கடிதம் எண் நிதி-10/20.01.2014 படி உறுதி செய்துள்ளார். ஆனால் அவரது சகோதரர் பணியாற்றும் மோடி அரசின் சயின்ஸ் டெக்னாலஜி துறை கடந்த 29.08.2014 அன்று கொடுத்த பதிலில் ஒரே ஒரு முறை விக்டர் ராஜமாணிக்கத்திற்கு பணம் கொடுக்கப் பட்டுள்ளது என தெரியப்படுத்தி உள்ளது. அப்படியானால் இதர 34 முறையும் பணம் கொடுக்கப் பட்ட கோப்புகள் மறைக்கப் பட்டதா அல்லது அழிக்கப் பட்டதா? இதன் பின்னணியில் உள்ளது என்ன?
அருமையான தலைப்பு.
இதற்குள்ள அறிக்கைகள் ஆய்வறிக்கை போன்ற எதுவுமே பல்கலைக்கழகத்திலும் இல்லை. சம்பந்தப்பட்ட துறையிலும் இல்லை . எனவே இது பற்றி தமிழக அரசும் மத்திய அரசும் நடவடிக்கை எடுக்குமா?
Modi Govt., should enquire about this Education Scam, as, documentary evidences are attached.