எஸ்.ஆர்.எம் பொறியியல் கல்லூரிக்கு
1) சிறப்பு வகையான 3 தண்ணீர் வகை தீயணைப்பான் பொறுத்தப் பட வேண்டும்
2) ஓஸ்ரீல் அமைப்பு பொறுத்த பட வேண்டும்
3) மேனுவல் ஆப்பரேட்டட் எலக்ட்ரிக் பயர் அலாரம் சிஸ்டம் அமைக்கப்பட வேண்டும்
4) ஆட்டோமேடிக் ஸ்மோக் டிடக்டர் அண்டு பயர் அலாரம் சிஸ்டம் அமைக்கப்பட வேண்டும்
5) 100000 லிட்டர் கொள்ளளவு கொண்டு மேல்நிலைத்தொட்டி அமைக்கப்பட வேண்டும்
6) நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கட்டண அடிப்படையில் தீயணைப்பு துறை மூலம் பயிற்சி அளிக்கப் பட வேண்டும்
என்ற ஆறு நிபந்தனைகளோடு 6 மாத காலம் செல்லுபடி ஆகும் தற்காலிக தடையில்லா சான்று மட்டுமே காஞ்சிபுரம் கோட்ட தீயணைப்பு அலுவலரால் மூ.மு. எண் 3569/ஈ/2009 நாள் 5.9.2009 படி வழங்கப் பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் நகல் வழங்கப் பட்டுள்ளது.
ஒரு பொது கட்டிடம் பல ஆயிரம் மாணவர்கள் கல்வி கற்கும் ஒரு கட்டிடம் தீயணைப்பு துறையின் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சான்று இன்றி இயங்கி வருவதற்கு அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. பிரதமர் மோடி இந்த கல்லூரிக்கு சென்றது தான் காரணமா என பொது மக்கள் கேட்கிறார்கள். இதோ அதன் நகல்