எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் மீது நடவடிக்கை எடுக்க அனுப்பிய 04.03.2015-ம் தேதிய புகார் மனுவோடு இணைக்கப்பட்டுள்ள புகைப்பட ஆதாரங்கள்; அதற்கான விபரங்களோடு கீழே இணைக்கப் பட்டுள்ளது.
மேற்கண்ட புகார் மனுவை பதிவு அஞ்சலில் அனுப்பியதற்கான அஞ்சல் அலுவலக ரசீதின் புகைப்பட நகலும் இணைக்கப் பட்டுள்ளது.
இணைப்பு
1) நீர் நிலைகள் அருகில் ஆக்கிரமிப்பை அகற்றவும் அவற்றை பாதுகாக்கவும் தமிழக அரசு பிறப்பித்த அரசாணை எண் 11 நாள் 20.01.97
2) தமிழ்நாடு ஏரிகளை பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007-ன் முக்கிய அம்சங்கள்.
3) நீர் நிலைகளில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு நிறுவனங்கள் அமைக்க தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணை எண் 127
4) வள்ளியம்மாள் சொசைட்டியின் மீது குற்ற வழக்கு தொடர்வதற்கு தமிழக அரசு கூடுதல் தலைமை செயலர் பிறப்பித்த உத்தரவு நாள் 26.8.2013
5) வள்ளியம்மாள் சொசைட்டி மீது குற்ற வழக்கு தாக்கல் செய்த விபரத்தை மாநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணை குழுவிற்கு மாசுக்கட்டுப்பாடு வாரிய உறுப்பினர் செயலர் தெரிவித்த கடிதம் நாள் 30.01.2014
6) சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்ட விதிகளை மீறி கட்டிடம் கட்டியதை ஒப்புக் கொண்டு அதற்கு மன்னிப்பு கோரி வள்ளியம்மாள் சொசைட்டி தலைவர் திரு.பச்சைமுத்து கொடுத்த கடிதம் நாள் 18.07.2013
7) காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்பு அலுவலர் கொடுத்த ஆறுமாத காலம் செல்லுபடியாகும் தற்காலிக தீயணைப்பு தடையின்மை சான்று நாள் 05.03.2009
8) மத்திய நிலத்தடி நீர் வாரியத்திடம் இருந்து தடையின்மை சான்று பெற வேண்டும் என தலைமை வன பாதுகாவலர் எழுதிய கடிதம் நாள் 12.02.2013
9) மேற்கண்ட நிலங்களின் வழியாக பாசன வாய்க்கால் செல்கிறது. நிலத்தை ஒட்டி ஏரிகள் உள்ளன என்பதற்கும் நிபந்தனைகள் மீறப்பட்டுள்ளன என்பதை நிரூபிக்கவும் காஞ்சிபுரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் எழுதிய கடிதம் நாள் 21.11.2006
10) போத்தேரி கிராமத்தில் தரைத்தளம் மற்றும் நான்கு தளங்களில் மொத்தம் 364 குடியிருப்புகள் கொண்ட குடியிருப்பு உபயோக கட்டுமானம் கட்டுவதற்கு தான் எஸ்.ஆர்.எம். இன்ஜினியரிங் கன்ஸ்ட்ரக்சன் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்திற்கு நகர் ஊரமைப்பு துறை இயக்குனரால் அனுமதி வழங்கப் பட்டுள்ளது என்பதை காண்பிக்க இயக்குனரின் செயல்முறை ஆணை நாள் 07.10.2010
11) ஏரி பாசன நன்செய் நிலங்கள், விவசாயத்திற்கு லாயக்கற்ற கழிவு நிலம் என உண்மையை மறைத்து அனுமதி பெற திரு.எஸ்.ஆர்.எம்.பச்சைமுத்து முயற்சி செய்கிறார் என்பதை காண்பிக்க மேற்கண்ட நிலங்கள் நன்செய் நிலங்கள் என உள்ள பொத்தேரி கிராம பட்டா எண் 564-ன் நகல்
12) பொதுப்பணித்துறை பொறியாளர் பள்ளமான நிலம் என குறிப்பிட்டுள்ளதை மறைத்து பாறையான நிலம் என பத்தி 1.4-லும், நன்செய் நிலத்தை நன்செய் நிலம் அல்லது பள்ளமான நிலம் இல்லை என பத்தி 1.8-ல் தவறான தகவலை கொடுத்து அனுமதி பெற முயற்சி செய்துள்ளதை நிரூபிக்க.
மேலும் எனது புகார் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அனைத்தையும் நிரூபிப்பதற்கு தேவையான அனைத்து ஆவணங்களும் தகவல் அறியும் உரிமை சட்டப்படி பெறப் பட்டு பாதுகாப்பில் உள்ளது. தேவைப்படும் போது ஆஜர் படுத்த தயாராக உள்ளேன்.
SRM Complaint All Annexures.compressed
சிறந்த,தேவையான முயற்சி.வாழ்த்துக்கள்.