பூரண யோக்கியர் உண்மை செய்தி உடனுக்குடன் என கூறிக் கொண்டு மக்களை திசை திருப்புவதற்காக பொய் செய்திகளை மிகைப்படுத்தி வெளியிட்டு வரும் புதிய தலைமுறை தொலைகாட்சி உரிமையாளர் எஸ்.ஆர்.எம். பச்சமுத்துவிற்கு உரிமை உள்ள கல்வி நிறுவனங்கள் எவ்வித அனுமதியும் இன்றி இயங்கி வருகின்றன என்பதையும் இவர் சட்ட பூர்வ நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காகவே நரேந்திர மோடி அவர்களையும் குடியரசு தலைவரையும் கல்லூரி நிகழ்ச்சிக்கு வரவழைத்து நிகழ்ச்சி நடத்துகிறார் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தேன். ஆனாலும் அதனையும் மீறி தமிழக அரசு கல்வி கொள்ளை நிறுவனத்தை நடத்தும் வள்ளியம்மாள் சொசைட்டிக்கு எதிராக அம்பத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் மூலம் குற்ற வழக்கு தாக்கல் செய்துள்ளது. இதோ அதற்கான ஆதாரம்.
உரிய அனுமதியின்றி சுற்றுச்சூழல் அனுமதியின்றி இந்த கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து இயங்குவதை எப்படி தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கூறும் மோடி அரசு அனுமதிக்கிறது.? இந்த நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காகத் தான் பொன்னார்இ அமித்ஷா என அனைவரையும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை வரவழைத்து கூட்டம் போடுகிறாரோ!
கரகாட்டகாரன் இசக்கிமுத்து மற்றும் பலரோடு சேர்த்து புதிய தலைமுறை தொலைகாட்சியில் இது பற்றி ஒரு விவாதம் நடத்தி பொது மக்களுக்கு தெரிவிக்க வேண்டாமா? வேண்டும் என்றால் இதர இனங்களுக்கு செய்வதை போல் அவர்களே போலியாக முகநூலில் வந்ததாக செய்தி வெளியிடட்டும். ஆனால் இந்த ஆவணங்கள் மற்றும் இந்த கல்வி நிறுவனங்கள் முறையான அனுமதியின்றி செயல்படுகின்றன என்பது பொது மக்களுக்கு தெரிய வேண்டாமா?
கல்வி கொள்ளை இளைய சமுதாயத்தினரின் ரத்தத்தை உறிஞ்சும் ஒரு மிகப்பெரிய கொள்ளை அல்லவா? யாரேனும் இதற்கு தகவல் தெரிய வேண்டும் என்றால் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய தலைமை அலுவலகத்தையோ அல்லது மாநில சுற்றுச்சூழல் ஆணைக்குழுவையோ அல்லது நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அம்பத்தூர் அவர்களையோ அணுகலாம். இதோ தங்களுக்காக மேற்கண்ட ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளது. எத்தனை ஊடகங்கள் இது பற்றி பேசுகின்றன என்பதை மக்கள் கவனித்து கொண்டே இருக்கிறார்கள்.