எஸ்.ஆர்.எம் நிறுவனத்தின் மீது 06.03.2015 தேதியில் பல்வேறு விதிமீறல்கள் பற்றி ஒரு புகார் அனுப்பப் பட்டு இருந்தது. அந்த புகார் http://pmaed.org/uncategorized/appeal-to-government-for-take-over-srm-university-to-protect-the-life-and-future-of-the-students/ இணைப்பில் உள்ளது. மேற்கண்ட புகார் மனு உண்மை தானா என கேட்டு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் 23.03.2015 தேதியில் கடிதம் எழுதியது. அது உண்மை தான் என்பதை உறுதி படுத்தி புகாருக்கு தொடர்புடைய ஆவணங்களும் 30.03.2015 தேதியில் மீண்டும் தொழில் நுட்ப கவுன்சிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டது. ஒரு வருட காலம் ஆகியும் தொழில் நுட்ப கவுன்சில் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தகவல் இல்லை