அரசு பணம் பல ஆயிரம் கோடி மோசடி. இந்திய அரசு கல்வியையும் ஆராய்ச்சியையும் ஊக்குவிக்க பல்வேறு புராஜக்ட்களுக்கு ஆண்டு தோறும் ஏராளமான பணத்தை ஒதுக்கீடு செய்து வருகிறது. இந்திய அரசு சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி துறையில் இருந்து இந்த பணம் பொதுவாக ஒதுக்கீடு செய்யப்படும். இதில் நியாயமான ஆராய்ச்சிக்கு செலவிடப்படும் தொகை மிகக் குறைவு. மாறாக ஆராய்ச்சி என்ற பெயரிலும் புராஜக்ட் என்ற பெயரிலும் ஏப்பம் இடப்படும் தொகை ஏராளம். டாக்டர் சமாதானம் என்று ஒருவர் இந்திய அரசு சயின்ஸ் டெக்னாலஜியில் பணியாற்றி வருகிறார். இவரது சகோதரர் டாக்டர் விக்டர் ராஜமாணிக்கம் என்பவர் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி…