பொத்தேரி மற்றும் வல்லாஞ்சேரி கிராமங்களில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் கட்டிடம் கட்டி உள்ள இடத்தில் நிபந்தனைப்படி பாசன கால்வாய் அகலம் குறைக்கப் படாமல் இருக்கிறதா என்பதும் மேற்கண்ட கட்டிடங்கள் விதிப்படி ஏரிக்கரைகளில் இருந்து எத்தனை மீட்டர் தொலைவில் இருக்கிறது என்பதும் நகர் ஊரமைப்பு துறையால் ஆய்வு செய்யப்படவில்லை (வினா எண் 1 மற்றும் 3) மேற்கண்ட கால்வாய்களுக்கு சிறு பாலம் அமைக்க நகர் ஊரமைப்பு துறை அனுமதி பெறப்படவில்லை. இதனை நகர் ஊரமைப்பு துறை 27.03.2015 தேதிய கடிதத்தில் தெரியப்படுத்தி உள்ளது. இது பற்றி இசக்கிமுத்துவும் வாய் திறக்கவில்லை. புதிய தலைமுறையும் ஒரு விவாதம் நடத்தவில்லை. எந்த அரசியல் கட்சியும்…
Category: Uncategorized
Appeal to Government for take over SRM University to protect the life and future of the students.
Copy of Complaint petition send to Central and State Govt., authorities to initiate action against Valliammal Society of SRM University for violating Fire Laws, Town and Country Planning Laws, Building laws and for not obtaining permission from the statutory authorities with a request to stop the operation from the unauthorized building and to take over Valliammal Society and SRM University to Government to protect the life and future of the…
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் சட்ட விதிமீறல்களுக்கான ஆவணங்கள்
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் மீது நடவடிக்கை எடுக்க அனுப்பிய 04.03.2015-ம் தேதிய புகார் மனுவோடு இணைக்கப்பட்டுள்ள புகைப்பட ஆதாரங்கள்; அதற்கான விபரங்களோடு கீழே இணைக்கப் பட்டுள்ளது. மேற்கண்ட புகார் மனுவை பதிவு அஞ்சலில் அனுப்பியதற்கான அஞ்சல் அலுவலக ரசீதின் புகைப்பட நகலும் இணைக்கப் பட்டுள்ளது. இணைப்பு 1) நீர் நிலைகள் அருகில் ஆக்கிரமிப்பை அகற்றவும் அவற்றை பாதுகாக்கவும் தமிழக அரசு பிறப்பித்த அரசாணை எண் 11 நாள் 20.01.97 2) தமிழ்நாடு ஏரிகளை பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007-ன் முக்கிய அம்சங்கள். 3) நீர் நிலைகளில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு நிறுவனங்கள் அமைக்க தடை…
சட்ட விதிகளை மீறி செயல்படும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு அனுப்பிய புகார் மனு நகல்
அனைத்து சட்ட விதிகளையும் காற்றில் பறக்க விட்டு பாதுகாப்பற்ற கட்டிடங்களில் செயல்பட்டு சட்ட விதிகளுக்கு முரணாக கட்டிடம் கட்டியதற்கு குற்ற வழக்கு தொடரப்பட்டுள்ள வள்ளியம்மை சொசைட்டியின் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் ஏழை மாணவர்களின் நலன் காக்க மேற்கண்ட பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்தவும் கேட்டு அரசு அதிகாரிகளுக்கு அனுப்பிய புகார் மனு மற்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ள புகார்களுக்கு ஆதாரமான ஆவண நகல்கள் மனுவை பதிவு அஞ்சலில் அனுப்பப் பட்டுள்ளது. மாணவர் நலனில் அக்கரை கொண்ட அனைவரும் இதனை அனைவருக்கும் தெரியப்படுத்தவும் மக்களிடம் இதற்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி…
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தை நடத்தும் பச்சமுத்துவின் வள்ளியம்மை சொசைட்டிக்கு எதிராக அம்பத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் குற்ற வழக்கு தாக்கல்
பூரண யோக்கியர் உண்மை செய்தி உடனுக்குடன் என கூறிக் கொண்டு மக்களை திசை திருப்புவதற்காக பொய் செய்திகளை மிகைப்படுத்தி வெளியிட்டு வரும் புதிய தலைமுறை தொலைகாட்சி உரிமையாளர் எஸ்.ஆர்.எம். பச்சமுத்துவிற்கு உரிமை உள்ள கல்வி நிறுவனங்கள் எவ்வித அனுமதியும் இன்றி இயங்கி வருகின்றன என்பதையும் இவர் சட்ட பூர்வ நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காகவே நரேந்திர மோடி அவர்களையும் குடியரசு தலைவரையும் கல்லூரி நிகழ்ச்சிக்கு வரவழைத்து நிகழ்ச்சி நடத்துகிறார் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தேன். ஆனாலும் அதனையும் மீறி தமிழக அரசு கல்வி கொள்ளை நிறுவனத்தை நடத்தும் வள்ளியம்மாள் சொசைட்டிக்கு எதிராக அம்பத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு…
தீயணைப்பு அனுமதியில்லா கடைகள் இடிக்கப்படும் போது தீயணைப்பு அனுமதியில்லா வள்ளியம்மை கல்லூரிக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு?
பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம் நிறுவனத்தை சேர்ந்த வள்ளியம்மை பொறியியல் கல்லூரிக்கும் தீயணைப்பு துறையால் வழங்கப்பட்ட தற்காலிக தடையின்மை சான்று காலாவதியாகி விட்டது. தற்போது அது தீயணைப்பு துறையின் செல்லுபடியாகும் தடையின்மை சான்றோ அல்லது உரிமமோ இன்றி இயங்கி வருகிறது. இதோ கோட்ட தீயணைப்பு அலுவலரின் தடையின்மை சான்று நகல்.
எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணம் ஆண்டுக்கு ரூபாய் 45,000 மட்டுமே
எஸ்.ஆர்.எம் குரூப் நிறுவனத்தின் ஈஸ்வரி பொறியியல் கல்லூரிக்கும், வள்ளியம்மாள் பொறியியல் கல்லூரிக்கும் அரசு நிர்ணயித்த கட்டணம் ரூபாய் 45,000 மட்டுமே. இதோ அண்ணா பல்கலைக்கழகத்தின் கடித நகல். பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலித்தால் பெற்றோர் பள்ளிகளை முற்றுகையிடுகிறார்கள். ஏன் அதிக கட்டணம் வசூலிக்கும் இம்மாதிரி கல்வி நிறுவனங்களை பெற்றோர்களோ அல்லது மாணவர்களோ முற்றுகை இடவில்லை. இந்த தகவலை தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் பரவ செய்து ஏழைகளுக்கு நியாயமான விலையில் பொறியியல் கல்வி கிடைக்க செய்ய வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை அல்லவா!!
எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரிக்கு தற்காலிக தடையின்மை சான்று மட்டுமே தீயணைப்பு துறையிடமிருந்து 6 மாத காலத்திற்கு 5.3.09 அன்று வழங்கப் பட்டது. தற்போது தீயணைப்பு துறையின் தடையின்மை சான்று இன்றியும், தற்காலிக தடையின்மை சான்றின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாமலும் இயங்கி வருகிறது.
எஸ்.ஆர்.எம் பொறியியல் கல்லூரிக்கு 1) சிறப்பு வகையான 3 தண்ணீர் வகை தீயணைப்பான் பொறுத்தப் பட வேண்டும் 2) ஓஸ்ரீல் அமைப்பு பொறுத்த பட வேண்டும் 3) மேனுவல் ஆப்பரேட்டட் எலக்ட்ரிக் பயர் அலாரம் சிஸ்டம் அமைக்கப்பட வேண்டும் 4) ஆட்டோமேடிக் ஸ்மோக் டிடக்டர் அண்டு பயர் அலாரம் சிஸ்டம் அமைக்கப்பட வேண்டும் 5) 100000 லிட்டர் கொள்ளளவு கொண்டு மேல்நிலைத்தொட்டி அமைக்கப்பட வேண்டும் 6) நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கட்டண அடிப்படையில் தீயணைப்பு துறை மூலம் பயிற்சி அளிக்கப் பட வேண்டும் என்ற ஆறு நிபந்தனைகளோடு 6 மாத காலம் செல்லுபடி ஆகும் தற்காலிக தடையில்லா…