வேந்தர் மூவிஸ் மதன் மாயமானாரா ? அல்லது மாயமாக்கப்பட்டாரா ? என மதன் வழக்கில் முக்கிய சாட்சியாக இருக்கும் சினிமா பைனான்சியர் போத்ரா கேள்வி எழுப்பியுள்ளார். எஸ்ஆர்எம் பல்கலை கழகத்தில் மருத்துவ படிப்பில் சேர்ப்பதாகக் கூறி மாணவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கிய வேந்தர் மூவிஸ் மதன் மாயமாகி உள்ளார். இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருக்கக்கூடிய சினிமா பைனான்சியர் போத்ரா, தமது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மாயமான மதனைத் தேடுவதில் எந்த பயனும் இல்லை என ஆதங்கம் தெரிவித்தார். மேலும் வேந்தர் மூவிஸ் மதன் மாயமானாரா? அல்லது திட்டமிட்டு மாயமாக்கப்பட்டாரா? எனவும் போத்ரா…
Category: Uncategorized
SRM குழுமத் தலைவர் பச்சமுத்துவிடம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை!
வேந்தர் மூவிஸ் மதன் மாயமான விவகாரம் தொடர்பாக எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் பச்சமுத்துவிடம் மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் பச்சமுத்தின் நெருங்கிய நண்பரான மதன், வேந்தர் மூவிஸ் என்கிற பெயரில் திரைப்பட நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த மே 28ஆம் தேதியில் இருந்து மதனைக் காணவில்லை. அவரது அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட கடிதத்தில், தான் காசிக்குச் சென்று உயிரோடு சமாதியடையப் போவதாக அவர் குறிப்பிட்டிருந்ததார். இதையடுத்து எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்புக்கு இடம்பெற்றுத் தருவதாகக் கூறித் தங்களிடம் மதன் பணம் பெற்றதாக 102 பேர் காவல்துறையில் புகார் அளித்தனர். 72.5 கோடி…
எஸ்ஆர்எம் பச்சமுத்துவிடம் ஏன் விசாரிக்கவில்லை என காவல்துறையிடம் உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி
எஸ்.ஆர்.எம் பல்கலையில் மருத்துவ படிப்புக்கு பணம் கொடுத்து ஏமாந்த மாணவர்களின் பெற்றோர்கள் தொடர்ந்த வழக்கில், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்துவிடம், இதுவரை ஏன் விசாரணை நடத்தவில்லை என தமிழக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வேந்தர் மூவிஸ் மதன் காணாமல் போனது தொடர்பாக அவரது தாயார் தங்கம் தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மற்றும் எஸ்.ஆர்.எம் பல்கலை கழகத்தில் மருத்துவ படிப்புக்கு பணம் கொடுத்து ஏமாந்த பெற்றோர்கள் சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்த இரண்டு மனுக்களும், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகமுத்து, பாரதிதாசன் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, தமிழக அரசு சார்பில்…
Simple method to improve memory power to rural area students
News 7 Tamil and Munuaadhi Trust jointly organized training to rural students studying in Government schools to develop the memory power thereby score higher marks. It is informed that, the pass percentage has increased in the government schools were such training is taken. Why don’t we share this to all the rural area schools and students.
’பச்சமுத்து படிப்படியாக பணக்காரர் ஆனது இப்படித்தானோ?’: பச்சமுத்துவுக்கு பாமக எழுப்பும் 9 கேள்விகள்
வன்னியர் கல்வி அறக்கட்டளை குறித்த ஆய்வுக்கு பாமக தயார் என்றும், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் குறித்த விசாரணைக்கு அதன் தலைவர் பச்சமுத்து தயாரா என பாமக கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து பாமக துணைப் பொதுச்செயலாளர் ஏ.கே. மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், “எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் மருத்துவர் படிப்புக்கு வேந்தர் மூவீஸ் அதிபர் மதன் மூலம் மாணவர்களை சேர்ப்பதில் நடந்த முறைகேடுகள் குறித்தும், எஸ்.ஆர்.எம் குழுமத் தலைவர் பச்சமுத்து ரூ.20,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை சட்டவிரோதமாக குவித்து வைத்திருப்பது குறித்தும் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வலியுறுத்தியிருந்தார். அதற்கு பதிலளிப்பதாகக் கூறி அறிக்கை…
வேந்தர் மூவீஸுடன் எனக்கு எந்த தொடர்பும் கிடையாது! – பச்சமுத்து : பேச தெரிஞ்ச பச்சமுத்துக்கு ஆதாரத்தை மறைக்க தெரியலையே!!!!
#அப்போ “தலைவா” படத்துல டைட்டில் போடுறப்போ ஒரு மூஞ்சி வருதே அது யாருடா….?
பச்சமுத்து மீது பா.ம.க. தொடர்ந்த அவதூறு வழக்கு ஒத்திவைப்பு
பா.ம.க நிறுவனர் ராமதாஸ் குறித்து தவறான தகவல் வெளியிட்டதாக எஸ்ஆர்எம் குழுமத் தலைவர் பச்சமுத்து மீது தொடரப்பட்ட வழக்கை ஜுலை 15ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை ஜார்ஜ் டவுன் பெருநகர குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து நாராயணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த 11ம் தேதி பச்சமுத்து வெளியிட்ட அறிக்கையில், திமுக, அதிமுகவிற்கு இணையாக தேர்தலில் பல கோடிகளை செலவு செய்து பாட்டாளி மக்கள் கட்சி செய்தி தாள்களில் விளம்பரம் வெளியிட்டது எப்படி? என்று கேள்வி எழுப்பினார். மேலும் கட்சி மாநாட்டிற்கும், இல்ல சுப நிகழ்ச்சிக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ் தம்மிடம் கையேந்தவில்லையா? என்றும் உண்மைக்கு…
உயிரோடுதான் இருக்கிறாரா வேந்தர் மூவீஸ் மதன்? உலாவரும் அதிர்ச்சித் தகவல்கள்!
வேந்தர் மூவிஸ் நிறுவன அதிபர் எஸ்.மதன், காணாமல் போனதாக சொல்லப்பட்டு 6 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், அவரின் நடமாட்டம் குறித்து எந்தத் தகவலும் கிடைக்காமல் உறவினர்களும், விசாரணை மேற்கொண்டுள்ள போலீசாரும் குழப்பத்திலும் தவிப்பிலும் இருக்கிறார்கள். இதனால் அவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற கோணத்திலும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர் போலீசார். தமிழகத்தின் பல்வேறு தனியார் கல்லூரிகளுக்கு பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கு ‘சீட்’ வாங்கிக்கொடுக்கும் ஏஜென்ட் வேலையைச் செய்துவந்தவர் மதன். கடந்த 20 ஆண்டுகளாக இதே வேலையில் ஈடுபட்டதால் தமிழகம் மற்றும் வடமாநிலங்களில் நிறையத் தொடர்புகளை வளர்த்துக் கொண்டார். மேலும் திரைத்துறையிலும் கால்பதிக்க எண்ணி, கடந்த 2011 ம் ஆண்டு…